சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, January 5, 2014

தேசிய மீலாத் நிகழ்வு வரும் 13 ஆம் திகதி

By on 9:52 PM

தேசிய மீலாத்  நிகழ்வுகளை எதிர்வரும் 13 ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளுமாறு    கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இறைவனின் இறுதித் தூதர் முஹம்மத்  (ஸல்) அவர்களின்  மீலாத்  நிகழ்வுகளை கல்வி அமைச்சின் 2011/33 இலக்கமும் 2011.12.12. திகதி மற்றும் 2013/29 இலக்கமும் 2013.10.12 திகதியும் கொண்ட சுற்று நிருபங்களுக்கு அமைய ஒரே நாளில் 2014.01.13 ஆம் திகதி நடத்துமாறு கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (திட்டமிடல் கொள்கை மற்றும் மீளாய்வு) எஸ்.யூ. விஜேரத்ன நாட்டின் சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் சுற்று நிருப மூலம் அறிவித்துள்ளார்.


இது தவிர அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்ள, பெற்றோர், கல்விச் சமூகம் சார்ந்தோரை வைத்து மிகச் மிகச் சிறந்த முறையில் இஸ்லாமிய கலை, கலாசார விழுமியங்களை பாதுகாக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்துவதோடு சிறந்த பாடசாலை சுற்றாடல்களையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment