சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, February 28, 2014

நாட்டுக்கு களங்க மேற்படுத்துவதை அனுமதிக்க முடியாது - கொத்தபாய

By on 4:32 AM

இலங்­கையின் சில பாகங்­களில் அவ்­வப்­போது மத ரீதி­யான முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வதை நாம் அறிவோம். இருப்­பினும் அவற்றை உரிய முறையில் தீர்த்து வைப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை பாது­காப்பு அமைச்சு தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரு­கி­றது. ஆனால் இவ்­வா­றான விட­யங்­களை பெரி­து­ப­டுத்தி நாட்­டுக்கு களங்கம் ஏற்­ப­டுத்­து­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது  என பாது­காப்புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் கொழும்பில் நடை­பெற்ற முஸ்லிம் பிர­மு­கர்­க­ளு­ட­னான  சிநே­க­பூர்வ சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் ஏற்­பாட்டில் வர்த்­தகர் ரிபாய் ஹாஜி­யாரின் இல்­லத்தில் நடை­பெற்ற இச் சந்­திப்பில் நாட்டின்  முஸ்லிம் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் கல்­வி­மான்­களும் வர்த்­தகப் பிர­மு­கர்­களும் கலந்து கொண்­டனர்.

இங்கு பாது­காப்புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்ஷ தொடர்ந்து கருத்து வெளி­யி­டு­கையில்இநாம் ஒரு­போதும் மத ரீதி­யா­கவோ கட்சிஇ அர­சியல் ரீதி­யா­கவோ பிரித்து நோக்கி வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தில்லை. கொழும்பு மேயர் எதிர்க்­கட்­சியைச் சேர்ந்­த­வ­ராக இருக்­கின்ற போதிலும் அவ­ருடன் நாம் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­கிறோம். அவரும் எமக்கு ஒத்­து­ழைப்புத் தரு­கிறார்.

இந்த நாட்டில் சமய விவ­கா­ரங்கள் தொடர்பில் சில தவ­றான புரிந்­து­ணர்­வுகள் இருப்­பது உண்­மைதான். இருப்­பினும் அவற்றைத் தீர்ப்­ப­தற்கு எமது அமைச்சு தேவை­யான மட்­டங்­களில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ளது

எமது நாட்டில் சில முகாம்­களைச் சேர்ந்­த­வர்கள் அவ்­வப்­போது பிரச்­சி­னை­களை உரு­வாக்கி வரு­கின்­றனர். ஆனால் அவர்கள் மிகவும் சிறிய குழு­வி­னர்தான். இவர்­களை எவ்­வாறு கையாள வேண்­டுமோ அவ்­வா­றுதான் நாம் கையாண்டு வரு­கிறோம். சில சந்­தர்ப்­பங்­களில் இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை நாம் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்­தி­யு­மி­ருக்­கிறோம். ஹிக்­க­டு­வையில் தேவா­லயம் மீது தாக்­குதல் நடத்­தியோர் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்­டனர். மேலும் சில விவ­கா­ரங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­டோரை நாம் வேறு வித­மாக கையாண்டோம். சில தரப்­பு­க­ளுடன் சம­ரசப் பேச்­சுக்­க­ளையும் நடத்­தினோம்.

அர­சாங்கம் எந்­த­வொரு வேலைத்­திட்­டத்­தையும் இன­வாத, மத­வாத நோக்கில் முன்­னெ­டுப்­ப­தில்லை. கருத்து மோதல்கள் ஏற்­ப­டும்­போது அவற்றுடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் தமக்குள் சுதந்திரமான முறையில் விவாதித்துக் கொள்வதற்கு நாம் இடமளித்துள்ளோம். ஆனால் இவ்வாறான விடயங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு களங்கம் ஏற்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

0 comments:

Post a Comment