சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, February 17, 2014

இலங்கை மன்றக் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்ற..

By on 8:48 PM

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் போரமும்  குலோபல் தொடர்பாடல் ஆராய்ச்சி சங்கமும் இணைந்து சர்வதேச ஊடக மாநாட்டை கடந்த 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை முன்று நாட்கள்  இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

உலக நாடுகளின் அமேரிக்கா, இந்தியா, தென்ஆபிரிக்கா, ஈரான், அவுஸ்திரேலியா பிரித்தாணியா போன்ற நாடுகளில் உலகலாவிய ஊடக நிறுவனங்கள் சர்வதேச பல்கலைக்கழகங்களின்  பேராசிரியர்கள் 30 பேரும் உள்ளூர் ஊடக நிறுவனங்களில்ருந்து 40 ஊடகவியலாளர்களும் ;இம் ஊடக மாநட்டில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் அபிவிருத்தி ஊடகவியாலாளர் போரத்தின் நிறைவேற்று பணிப்பாளர்  எம்.சி ரஸ்மின்  அவுஸ்திரேலியா பல்கலைகழகத்தின் கலாநிதி கசுன்  ஓபேசிரி பேராசரியர் ரன்ஜித் பண்டார அமேரிக்காவைச் சேர்ந்த கலாநிதி ஆர். ஈ டேவிஸ், லண்டனைச் சேர்ந்த கலாநிதி உபுபோமா,  இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் தப்தி வாசு  ஆகியோறும் கலந்து கொண்டனர்.

ஊடக சமுகமும் இந்தியா ,தொலைக்கட்சிகளின் பங்களிப்பு யுத்த நாடுகளின் காட்சிகளின் முரண்பாடுகள்இ செய்தித் தலைப்புக்கள், இந்தியா இலங்கை வானொலியின் பங்களிப்பு, பேஸ் புக் பாவணையாளர்கள் ,மனித கடத்தல் சர்வதேச ஊடகத்தின் பங்களிப்பு போன்ற பல்வேறு தலைப்புக்களில்  விரிவுரைகளும் செயல்முறைகளும் நடாத்தப்பட்டது.

இவ் ஊடக மாநாட்டின்போது சர்வதேச ரீதியில் வலவாலர்களும் உள்ளூர் வெளிநாட்டு ஊடகவியாளர்களும்  இலங்கை மற்றும் பங்கு பற்ற வந்திருந்தவர்களின் நாடுகளின் விவசாயம், உற்பத்தி, சூழல் கணனி ஊடான நுட்ப ஊடகவியல்  பற்றிய  சிறந்த அறிவையும்  நிலைமைகளையும் பரிமாரிக்கொண்டனர்.

இருதி நாள் நிகழ்வின்போது பங்குபற்றியபவர்கள் தொண்டர்களுக்கு சான்றிதழும் பரிசுகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு வருகை தந்த சர்வதே ஊடகவியாளர்கள் இலங்கை பற்றி தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

0 comments:

Post a Comment