நுவரெலியா, ராகலை தோட்டத்தில் லயன்குடியிருப்பு ஒன்றின் வீட்டு சமயலறைப் பகுதியில் விண் கல் விழுந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
நேற்று (17) இரவு 11.00 மணியளவில் விண்கல் விழுந்த சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் என்ன சத்தம் என பார்க்க சென்றபோது வீட்டின் சமயலறைப்பகுதி தீ பற்றி எரிந்துள்ளது.
நேற்று (17) இரவு 11.00 மணியளவில் விண்கல் விழுந்த சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் என்ன சத்தம் என பார்க்க சென்றபோது வீட்டின் சமயலறைப்பகுதி தீ பற்றி எரிந்துள்ளது.
டீ.எம். கருணாரத்ன எனும் உரிமையாளரின் வீட்டிலே இவ்வாறு விண்கல் விழுந்துள்ளது.
இதன்போது விண்கல்லை அவதானித்த வீட்டு உரிமையாளர் உடனடியாக ராகலை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்ததையடுத்து பொலிஸார் உடனடியாக குறித்த வீட்டிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
இது விண்கல்லா? அல்லது வேறேனும் கல்லா? என இனங்காணப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி, மொரட்டுவ பல்கலைகழகத்தில் விஞ்ஞான ஆய்வாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment