சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, March 9, 2014

100 வருடம் பழமையான காணியினை பெற்றுத் தருமாறு மறைக்கார் தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்

By on 10:14 PM

நேற்று (09) காலை 8 மணியில் இருந்து 2 மணிவரைக்கும் மரிச்சிக்கட்டி மரைக்கார் தீவு மக்கள், கடற்படை மற்றும் இரானுவத்தினர் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கும் 250 ஏக்கருக்கும் அதிகமான தங்களின் பூர்வீக காணியினை மீட்டுத் தருமாறு கோரி மரைக்கார் தீவில் உள்ள பிரதான வீதியினை மரித்து போராட்டம் நடத்தினர்.

வனவள அதிகாரிகள் அப்பிரதேசத்தினை பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தியுள்ளதாகவும், இரானுவத்தினர் தங்களின் இரானுவ தளங்களை மேலும் விரிவு படுத்திக்கொள்ள அவர்களின் வசம் வைத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



மன்னார் மாவட்டத்தில் யுத்ததினால் அதிகமாக இழப்புக்களை சந்தித்த பிரதேசமாக முசலி பிரதேசம் காணப்படுகின்றது.

இந்த வீதி மறியல் போராட்டத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். சம்மந்தப்பட்ட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோசம் எழுப்பினர்.

0 comments:

Post a Comment