மத்திய நைஜீரியாவின் கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்த தீவிரவாதிகள் வீடுகளை தீக்கிரையாக்கி, கொள்ளையடித்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமவாசிகளை கொன்றுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடுனா மாவட்டத்தின் அங்வன் கட்டா, சென்ஷ்யி, அங்வன் சங்க்வாய் ஆகிய கிராமங்களை கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவில் ஆயுதமேந்திய சுமார் 40 தீவிரவாதிகள் முற்றுகையிட்டனர். வீடுகளுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்களை துப்பாக்கியால் சுட்டும், வீச்சரிவாளால் வெட்டியும் ஈவிரக்கமின்றி கொன்ற அவர்கள், வீட்டினுள் இருந்த உணவுப் பொருட்களை கொள்ளையடித்ததுடன் பல வீடுகளை தீ வைத்து எரித்து விட்டு தப்பியோடினர்.
விடிய விடிய நடைபெற்ற இந்த வன்முறை வெறியாட்டத்தில் சென்ஷ்யி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களும், அங்வன் கட்டா, அங்வன் சங்க்வாய் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களும் பலியானதாக உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு பயந்து வீடுகளை விட்டு தப்பியோடிய பலர் உயிர் பயத்தால் இன்னும் புதர்களுக்குள்ளேயே பதுங்கியிருப்பதாகவும் தீ வைப்பு சம்பவத்தில் வீடுகளை இழந்த சுமார் 2 ஆயிரம் மக்கள் குவாண்டாங் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட 3 கிராமங்களும் கிருஸ்துவ மக்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால், முஸ்லிம் ஃபுலானி இன மேய்ப்பர்கள் கூட்டம் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

0 comments:
Post a Comment