நேற்று முன் தினம் பேஸ்புக்கில் அதன் நிறுவனர் மார்க் சக்கர் பேர்க் வெளியிட்டிருந்த கருத்து பெரும் வரவேற்பினைப் பெற்றிருந்தது. 3 இலட்சம் லைக்குகள், 2 இலட்சம் கமாண்ட்ஸ் மற்றும் 1 இலட்சம் பகிர்வு என பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
கோடிக்கணக்கான பேஸ்புக் பயனாளிகளின் நன்மைக்காகவும், இணையத்தள பயன்பாட்டாளர்களின் உரிமைக்காகவும் அமெரிக்க அரசிற்கும், ஒபாமாவுக்கும் எதிராக குரல் கொடுத்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
'அமெரிக்க அரசு இணையத்தில் ஜாம்பவானாக இருக்கலாம். ஆனால் அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது. இணையத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள்' என்று மார்க் சக்கர் பேர்க் கூறியிருந்தார்.
இதுவரை எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மட்டுமே எதிர்கொண்ட ஒபாமாவுக்கு இந்த விடயம் பெரும் அதிர்ச்சியாக காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
என்.எஸ்.ஏ, சி.ஐ.ஏ உள்ளிட்ட அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மைக்ரோசொப்ட், யாஹு, கூகுள்இ பேஸ்புக், பால்டாக், ஏ.ஓ.எல், ஸ்கைப், யூடியூப், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் சேவர்களையும் அதன் பயனாளர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இதனையடுத்து, தங்களின் கண்காணிப்பு கணனிகளை முடக்க பேஸ்புக் முயற்சிப்பதாகத் தெரிகிறது என இரு நாட்களுக்கு முன்னர் என்.எஸ்.ஏ ஒரு தகவலை வெளியிட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையிலே மார்க் சக்கர் பேர்க்கின் இந்தக் கருத்து அமைந்திருக்கின்றது.
இதேவேளை, சக்கர் பேர்க்கை ஒபாமா தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

0 comments:
Post a Comment