சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, March 3, 2014

சிங்கள இனத்தை அழிப்பதற்கு நூதன திட்டம் ஒன்று வகுக்கப் பட்டுள்ளதாம்!

By on 11:37 PM

சிங்கள இனத்தை அழிப்பதற்கு நூதன திட்டமொன்று வகுக்கப்படுவதாக சிரேஸ்ட பௌத்த பிக்கு ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். ராமன்ய நிக்காயவின் பீடாதிபதி நாபானே தேரர் இந்தக் குற்றச்சாட்டைசுமத்தியுள்ளார் என்று தகவல்கள் குறிப்பிடுகிறது.

வெளிநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீரகத் தொகுதியில் சதகுப்த என்னும் பொருள் கலக்கப்பட்டிருந்தது. இந்தப் பொருளானது பெண்களின் கர்ப்பத்தை கலைப்பதுடன், பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்ட வகையில் சிங்கள இனத்தை அழிப்பதற்கு இவ்வாறான நூதன திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த காங்களிலும் சிங்கள இனத்தையும் பௌத்த மத்த்தையும் இல்லாதொழிக்க முயற்சிக்கப்பட்டது.

தற்போது நூதனமான முறையில் சிங்கள இனத்தின் விருத்திற்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது ஏன அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பாராட்டு அளிக்கும் வகையில் பொல்கொல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சதகுப்ப' மலிவான விலையில் கிடைக்கப் பெறுவதனால் இலாப நோக்கம் கருதியே இத்தகைய மூலிகையினை வியாபாரிகள் சீரகத்துடன் கலப்படம் செய்து வருகின்றனர் என நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment