மியன்மாரில் அடிப்படைவாத பௌத்த மக்களின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் ரோஹின்கயா முஸ்லிம் மக்களின் உண்மையான நிலைமையை ஆராயும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இன்று மியன்மார் சென்றுள்ளனர்.என்று தெரிவிக்கப் படுகிறது
இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது , அகிம்சைவாதிகளான பௌத்த மக்கள், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறையில் பதிலளிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் இவர்கள் ஆராயவுள்ளனர்.என்றும் பௌத்த பயங்கரவாதத்தின் அடையாளம் என மேற்குலக நாடுகளினால் அழைக்கப்படும் மியன்மாரின் சிரத்து தேரர் உட்பட அந்நாட்டின் பௌத்த தலைவர்களை சந்தித்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பொதுபலசேனா கலந்துரையாட எதிர்பார்த்துள்ளது என அந்த அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே தாய்லாந்தில் இருந்து தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து ஆராய பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள் அங்கு சென்றிருந்தனர். அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பௌத்த தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் மியன்மார் சென்றுள்ளனர்.எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது

0 comments:
Post a Comment