மாவனெல்ல கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்துள்ளனர்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ஜீ.சமரநாயக்க மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் உப தலைவர் அசேல சமரநாயக்க ஆகியோரே இந்த விபத்தில் காயடைந்துள்ளனர்.
இவர்கள் பயணித்த கெப் வாகனம், கண்டியிலிருந்து பாணந்துறைக்கு பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்சுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த மேலும் இருவரும், பஸ்சில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கெப் வண்டியின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதே இந்த விபத்துக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர்
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மாகாண சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

0 comments:
Post a Comment