மேல் மாகாணசபை மற்றும் தென் மாகாணசபைக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள போதிலும் 2009ம் ஆண்டு மாகாண சபைகளுக்கான
தேர்தலில் பெற்றிருந்த உறுப்பினர்களை விட இம்முறை குறைவான உறுப்பினர்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ளது.
2009ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது 12 ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ளது, ஐக்கிய தேசிய கட்சியும் இரண்டு ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ளது, ஆனால் ஜேவிபி உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஆறாக உயர்ந்துள்ளது.
தனித்து போட்டியிட்ட அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரு ஆசனங்களை தக்க வைத்து கொண்டுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணசபை தேர்தல் முடிவுகள் ஆனால் மற்றுமோர் பங்காளிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஒருவர் கூட தெரிவாக முடியாதவாறு அக்கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மாவட்டமான காலி, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணசபையிலும் ஆளும் கக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த ஆசனங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் 38 ஆசனங்களை பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை 33 ஆசனங்களையே பெற்றுள்ளது.
அதேவேளை ஜேவிபியுடைய ஆசனங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாக அதிகரித்துள்ளது. காலி , அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணசபை முடிவுகள் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியுடைய ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லை என்பதை அம் மாகாணத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. ஆளும் கூட்டணியின் செல்வாக்கு தற்போது சரிவைக் கண்டுள்ளதாகவே தேர்தல் முடிவு காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தியாக வருவதற்குரிய வாய்ப்புகள் தென்படுவதாகவே முடிவுகள் காட்டுகின்றன சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மேல் மாகாண சபையில் 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் தென் மாகாண சபையில் மூன்று ஆசனங்களை கைப்பற்றி மொத்தமாக 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
மேல் மாகாணத்தில் ஆளும் கட்சி 56 ஆசனங்களை கைப்பற்றியதுடன் ஐக்கிய தேசியக் கட்சி 28 ஆசனங்களை கைப்பற்றியது. இந்த கட்சிகளுக்கு அடுத்தப்படியாக 9 ஆசனங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

0 comments:
Post a Comment