காணாமற்போனோர் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை கிழக்கு மாகாணத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளவுள்ள சாட்சி பதிவுகளின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
கோரளைப்பற்று வடக்கு – வாகரை, தெற்கு கிரான் ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 20ஆம் திகதி முதற்கட்ட சாட்சிப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. ஏறாவூர் மற்றும் செங்கலடி ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 21ஆம் திகதி சாட்சிப் பதிவுகள் இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்முனை வடக்கு, மட்டக்களப்பு பிரதேச செயலக பிரிவுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

0 comments:
Post a Comment