229 பேருடன் காணாமல் போன விமானத்தின் ஓட்டுனர் இலங்கை விமான ஓடு பாதை தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாலே டெலி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, மாலைத்தீவு மற்றும் அமெரிக்க படை வீரர்கள் தங்கி இருக்கும் டியேகோ கார்சியா தீவினதும் விமான ஓடு பாதை தொடர்பில் குறித்த விமானியின் மடிக்கணனியில் தகவல்கள் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன விமானம் தொடர்பில் விசாரணை நடத்தும் மலேசிய பொலிசார், விமானிகளது வீடுகளுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போதே இலங்கை தொடர்பிலும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதே வேளை குறித்த விமானத்தில் பயணித்த சீன பிரஜைகள் எவரும் விமானம் கடத்தப்பட்டிருப்பின் கூட அதற்கு சம்பந்தம் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment