ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் விபசாரி எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் ஒட்டிக்கொள்ளும் கொள்கையே ஹக்கீமிற்குள்ளது என பொதுபலசேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்தினை பரப்பி கிழக்கினை பிரிக்கும் செயற்பாட்டினை முஸ்லிம் காங்கிரசே செய்து வருகின்றனர். சிங்கள இனம் அழிக்கப்படுமாயின் நாட்டில் முஸ்லிம்கள் வாழ முடியாது போய்விடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பொதுபலசேனா பௌத்த அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டின் தீர்மானிக்கும் சக்தி என மார்தட்டிக் கொள்கின்றனர். ஆயினும் முஸ்லிம் காங்கிரசினால் நாட்டில் அல்லது அரசாங்கத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது அரசாங்கத்தின் பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு மக்களையும் நாட்டையும் சீரழிக்கும் செயலையே முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருகின்றது.
எந்த அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டு தம்மை பெரியவர்களாகக் காட்டிக் கொள்கின்றனர். எந்தவொரு கொள்கையும் இல்லாது விபசாரம் செய்யும் பெண்களைப்போல் அழைத்த இடமெல்லாம் சென்று அரசியல் செய்வதே அவர்களின் கொள்கையாக உள்ளது. இவை தாம் நாட்டில் அரசியலை தீர்மானிப்பதாகவும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் ஆட்சி மாற்றம் ஏற்படுமெனவும் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதை விடவும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வது நல்லது. ஆயினும் அதனை ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் செய்யப்போவதில்லை.
மேலும் நாட்டில் தீவிரவாதத்தினை பரப்பி கிழக்கில் தனி முஸ்லிம் ஆட்சியினை அமைக்கும் முக்கிய செயலை ஹக்கீமே செய்து வருகின்றார். நாட்டில் அநாவசியமான முறையில் பள்ளிவாசல்களையும் மதஸ்தலங்களையும் அமைத்து முஸ்லிம் சமூகத்தினை தீவிரவாத கொள்கைக்குள் மாற்றி நாட்டில் பிரிவினையினை தூண்டும் கொள்கையிலேயே இவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் தீவிரவாதத்தினையும் பெண்களையும் கர்ப்பிணிகளையும் மதக் கொள்கை என்ற பெயரில் கொலை செய்யும் ஓர் முஸ்லிம் தீவிரவாதியிடம் பேச்சுவார்த்தை நடத்ததும் தேவை ஹக்கீமிற்கு ஏன் வந்துள்ளது.
இலங்கையிலும் மத்திய கிழக்கு நாட்டு முஸ்லிம் கொள்கைகளைப் பரப்பி இலங்கையில் கொடூரமான செயல்களை முஸ்லிம் மக்களிடையே பரப்பி இலங்கையில் அமைதியின்மையினையும் தீவிரவாதத்தினையும் பரப்பவே இவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்கின்றனர். இன்று இலங்கையில் இருந்து மத்திய கிழக்கிற்கு சென்றுள்ள சிங்கள தமிழ் பெண்கள் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியுள்ளனர். அதே போல் கிழக்கிலும் தமிழ் பெண்களை மத மாற்றம் செய்து சமூக அழிப்பினை செய்து கொண்டுள்ளனர். இவை அனைத்திற்கும் தலைமை தாங்கும் சக்தியாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகின்றது.
இலங்கையில் தொடர்ந்தும் சிங்கள சமூகத்தினை அழிக்கும் செயற்பாட்டினை முஸ்லிம் தீவிரவாதிகள் செய்து வருவார்களாயின் இலங்கையில் முஸ்லிம் இனத்தினருக்கும் வாழ்வது குறித்து கேள்வி ஏற்படும். இலங்கையில் மூவின சமூகங்கள் அமைதியாக வாழ வேண்டுமாயின் முஸ்லிம் தீவிரவாதக் கொள்கையினை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment