சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, March 13, 2014

ஜனாதிபதியை ஆதரித்து இன்று ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் பேரணி

By on 10:47 PM

ஜெனீவா பிரேரணையில் ஜனாதிபதியையும், எமது நாட்டையும் ஆதரித்து கல்முனை முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற உள்ளது.

கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் ஆரம்பிக்க உள்ள இந்தப் பேரணி கல்முனை நகர் பிரதேச செயலகம் வரை செல்ல உள்ளது.

கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், கல்முனை நகர் ஜும்ஆபள்ளிவாசல், கல்முனை அன்சார் சுன்னத்துல் முகம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல், இஸ்லாமாபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியன உட்பட 21 பள்ளிவாசல்கள், 3 வர்த்தக, கைத்தொழில் அமைப்புக்கள், 22 சமூக சேவை முன்னெடுப்பு அமைப்புக்கள், 18 விளையாட்டுக்கழகங்கள் மற்றும் ஏனைய பிரதேச அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு பேரணியை நடாத்த உள்ளதாக கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ். எம். ஏ. அனிஸ் தெரிவித்தார்.

இதே வேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்முனை நகரை ஒட்டியதாக கல்முனை தமிழ் சமூகம் ஏற்பாடு செய்திருந்த ஆதரவு பேரணி ஒன்றும் இடம் பெற்றிருந்தது.

எனினும் இப்பேரணியானது ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்துவதாக ஆரம்பமான போதும், அதன் ஒவ்வொரு செயற்பாடும் தமது உரிமைகளை பெற்று எடுப்பதை நோக்காகவே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை உப தமிழ் பிரதேச சபையை தரம் உயர்த்தி தருமாறு கோரியே இவ்வார்ப்பாட்டம் இடம் பெற்றிருந்தது. 

0 comments:

Post a Comment