தம்புள்ள பள்ளிவாயல் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன என பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் எம். ரஹ்மதுல்லாஹ் தெரிவித்தார்.
குறித்த பள்ளிவாயல் மீது நேற்றிரவு 8.45 மணியளவில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். பள்ளிவாயலின் பின் புறத்தாலேயே இக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
இதில் ஒரு குண்டு மாத்திரமே வெடித்துள்ளது. எனினும் இத்தாக்குதலின் மூலம் பள்ளிவாயலுக்கு சிறியளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ள பொலிசார் மேற் பொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment