சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, March 26, 2014

நாட்டில் மத சகியாமை இருப்பதை உத்தியோக பூர்வமாக மறுக்கும் அரசாங்கம்

By on 2:55 AM

நாட்டில் மத சகியாமை இருப்பதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக மறுத்துள்ளது . இந்த மறுப்பு முன்னேரே ஊகிக்கப் பட்டதுதான் ,  இருக்கும் ஒரு பிரச்சினையை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக இல்லை என மறுப்பதன் ஊடாக அரசாங்கம்   அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் தேவையையும் இல்லாது செய்வதுடன், அந்த பிரச்சினை தொடர்ந்தும் வளர்ந்து செல்ல அனுமதிக்கறது என பிரபல ஆங்கில இணையத்தளமான Groundviews யின் கட்டுரையாளரான ஹரீம் பீரிஸ்- ‘CBK takes on religious intolerance in Sri Lanka’ என்ற அவரின் கட்டுரையில்   தெரிவித்துள்ளார் .

அவர் தெரிவித்துள்ளதாவது , அரசாங்கம் மறுக்கிறது:

இலங்கையில் மத சகியாமை தொடர்பாக ராஜபக்ஷ நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ பதில்,  யூகிக்கப்பட்டது போன்று வந்துள்ளது , இது மிகவும் கவலைக்குரியது,  அரசாங்கம் உத்தியோகபூர்வமாக நாட்டின் எந்த மத சகியாமை  பிரச்சினை இருப்பதையும்   மறுத்துள்ளது . சுயாதீனம் அற்ற நீதித்துறை  ஊழல்,  கடத்தல்கள், சித்ரவதை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தாமை , அதிருப்தியாளர் மீதான வன்முறை போன்றவற்றை மறுப்பது போன்று  இப்பொழுது மத சகியாமையையும் மறுத்துள்ளது .

ஒரு பிரச்சினையின் இருப்பை மறுக்கும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் அந்த பிரச்சினையை  தீர்ப்பதன் தேவை இல்லாது செய்வதுடன் அதை தொடர்ந்து செழிப்புடன் வளர அனுமதிக்கிறது. என  அவர் தெரிவித்துள்ளார் .

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாக எழுதப் பட்டுள்ள குறித்த ககட்டுரையில் மேற்படி தெரிவித்துள்ளார் .

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க  நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக செயல்பட்டு வருவதை நாட்டில் உள்ள பெளத்த இன, மத வாத சக்திகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பெளத்த மதத்தின் எதிரி , துரோகி என கூறி  அவர் மீது கடுமையாக பாய்ந்து வருகிறது .நிலையில் ஆளும் கட்சியின் முக்கியஸ் தரும்   அமைச்சருமான டலஸ் அழப்பெரும முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு முயற்சித்து வருவதாககுற்றம் சுமத்தியிருந்தார்என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது .

0 comments:

Post a Comment