மட்டக்கப்பு மாவாட்டம் குருக்கள் மடத்தில் 1990 களில் விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்து புதைக்கப்பட்டுள்ளதாக அறியப்படும் இடங்களை UNDP நீதி உதவியுடனும் ICRC மேற்பார்வையின் கீழும் தோண்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது .
குறித்த இடங்களை காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நேரில் சென்று பர்வையிட்டதுடன் அந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் நேற்று திங்கட்கிழமை கொழும்பு சென்று ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், செஞ்சிலுவைச் சங்க ICRC உறுப்பினர்கள் ஆகியோருடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன் போது குறித்த இடங்களில் உள்ள புதைகுழிகளை தோண்டுவது எவ்வாறு, மனித எச்சங்களை அடையாளம் காண்பதற்குரிய மரபணு சோதனைகளை எவ்வாறு மேற் கொள்வது என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் இதற்குரிய நிதி உதவிகளை UNDP வழங்கும் எனவும் ஐஊசுஊ யினரின் மேற்பார்வையின் கீழ் இது இடம்பெறும் எனவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் வேண்டுகோளின் படி காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதி விஷேடமாக காத்தான்குடிக்கு விஜயம் செய்து காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளையும் மேற் கொள்ளவுள்ளது.

0 comments:
Post a Comment