ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவரும் இலங்கை வழமைப்போலவே முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இன்றைய தினம், ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு மஹிந்த சமரசிங்க முஸ்லிம் நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பிலும் அவர் விளக்கம் அளிக்க உள்ளார்.
ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகளை சந்தித்து அமைச்சர் சமரசிங்க ஏற்கனவே பேசியுள்ளார்.
எனினும் கடந்த முறைகளைப் போன்று முஸ்லிம் நாடுகள் இம்முறை இலங்கைக்கு ஆரவளிக்குமா என்பது சந்தேகத்திற்கு இடமாகியுள்ளது.
காரணம் இம்முறை ஐநாவில் இலங்கையில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளதால் உள்நாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக அரசாங்க தரப்பில் இருந்தும் பௌத்த அடிப்படைவாத சக்திகளிடம் இருந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் சர்வதேச முஸ்லிம் நாடுகள் இம்முறை ஆதரவு வழங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

0 comments:
Post a Comment