சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, April 18, 2014

இரு வேறு வாகன விபத்துக்களில் சிக்கி 14 பேர் பரிதாப மரணம்

By on 11:22 PM

பொலன்னறுவை அரலகங்வில அளுத்ஒயா பகுதியில் பாரிய விபத்து; 9 பேர் பலி


அரலகங்வில அளுத்ஒயா பகுதியிலுள்ள  இசெட் ஈ வாய்க்காலுக்குள்  சிறிய ரக உழவு இயந்திரமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பகல் 12.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், இரண்டு ஆண்களும், இரண்டு சிறுவர்களும் சிறுமி ஒருவரும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுடன் நீரில் மூழ்கிய மேலும் எட்டு பேர் காப்பாற்றப்பட்டு அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தெஹியத்தகண்டிய, நிக்கவத்த, லந்த பகுதியிலிருந்து அரலகங்வில செவனபிட்டிய பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


கதிர்காமம் வாகன விபத்தில் ஐவர் பலி; உயிர்த்தப்பிய சிறுவன் வைத்தியசாலையில்

கதிர்காமம் தெட்டகமுவ வாவிக்குள் வாகனமொன்று விழுந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கண்டியில் இருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

உயிரிழந்த ஐந்து பேரது சடலங்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.பி.சரத் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 5.45 அளவில் இந்த சடலங்களை கதிர்காமம் பொலிஸார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிர்த்தப்பிய சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் மாவட்ட வைத்திய அதிகாரி  கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment