வில்பத்து தேசிய சரணாலயதுக்குள் அத்துமீறி குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படும் முஸ்லிம் குடும்பங்கள் கடற்படையினர் நிலைகொண்டுள்ளமை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் என ஊடகங்களில் வெளியான
தகவலை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை கடற்படை ஆகியன மறுத்துள்ளன .
பாதுகாப்பு அமைச்சின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய முள்ளிக்குளம் மற்றும் மறிச்சுகட்டி பகுதிகளில் கடற்படை நிலைகொண்டுள்ளமை காரணமாக ஒரே ஒரு முஸ்லிம் குடும்பமே இடம்பெயர்ந்துள்ளது ஆனால் அந்த குடும்பம் சரணாலய பகுதியில் உள்ள மீள்குடியேற முற்படும் கும்பங்கள் மத்தியில் இல்லை என தெரிவித்துள்ளார் .
மேலும் அவர், இலங்கை கடற்படை சிவில் அதிகாரிகளுடன் இணைந்து மறிச்சுகட்டி பகுதியில் இந்த குடும்பத்துக்கு மாற்று நிலம் வழங்க ஏற்பாடுகளை செய்துவிட்டது. வேறு எந்த முஸ்லிம் குடும்பங்களும் எப்போதும் இப்பிரதேசத்தில் இலங்கை கடற்படை நிலைகொண்டுள்ளமை காரணமாக தாம் இடப்பெயர்துள்ளதாக கூறி எம்மை அணுகவில்லை எனவும் தெரிவித்துள்ளார் .
எனினும், அரசியல் வட்டாரங்களை ஆதாரமாக கொண்டு வெளியான ஊடக தகவல்களில் , இந்த சரணாலயத்தின் உள்ளே ஆனால் வில்பத்து தேசிய பூங்கா எல்லைக்கு வெளியே தற்காலிக கூடாரங்களை அமைத்துதுள்ளவர்கள் கடற்படையினரால் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தங்கள் சொந்த முயற்சியால் அங்கு சென்றவர்கள் என தெரிவிக்கிறது .
சிவில் அதிகாரிகள் எமது தாயகத்தின் தேசிய பாதுகாப்பு நலன்களை பாதுகாக்க உறுதி கொண்டுள்ள பாதுகாப்பு படையை இந்த விடயத்தில் இழுத்து விடாமல் இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சிப்பார்கள் என நம்புவதாக வணிகசூரிய தெரிவித்துள்ளார் .
அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல் வெளியிடும்போது ,1990 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினர்.1990 ஆம் ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் அகதிகளாகினர். நானும் அந்த அகதிகளில் ஒருவன்.
மரிச்சுக்கட்டி, கரடக்குழி, பாளைக்குழி, முள்ளிக்குளம் ஆகிய கிராமங்கள் வில்பத்து வனத்தின் எல்லையில் அமைந்துள்ளன.முஸ்லிம்களின் சொந்த கிராமங்களிலேயே அவர்களை மீள்குடியேற்றுவதற்கான ஜாசின் சிட்டி என்ற வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வில்பத்து வணவள பிரதேசத்தில் எவ்வித கட்டுமாணங்களும் நிர்மாணிக்கவில்லை. அதற்கு வெளியே 72 குடும்பங்கள் ஓலையினால் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது காணிகளை யுத்த காலத்தில் கடற்படை 600 ஏக்கர் நிலத்தினை அவர்களது முகாம்களுக்காக எடுத்துக்கொண்டதால் அவர்கள் மீளக் குடியேறமுடியாமல் உள்ளனர். என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment