ஜாதிக பலசேனா அமைப்பின் உறுப்பினரான வட்டரத விஜித தேரரின் மஹியங்கன விகாரைக்கு இன்று காலை சென்ற பொது பல சேனா இயக்கத்தினர் விகாரையின் தேரர் ஒருவருக்கு அச்சுறுத்தல்
விடுத்துள்ளதாக வட்டரத விஜித தேரர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவலில் , இன்று காலை தனது ஊரான மகியங்களை விஹாரைக்கு ஏழு வாகனங்களில் வந்த பொது பல சேனாவின் உறுப்பினர்கள் விகாரையின் வதிவிட தேரருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் குறித்த தேரர் தனக்கு அச்சுறுத்தல் தொடர்பான விபரங்களை தொலைபேசியில் தெரிவித்ததை தொடர்ந்து தான் இது தொடர்பாக பொலிசில் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
அதேவேளை மஹியங்கனை விகாரைக்கு சென்றது தமது உறுப்பினர்கள் இல்லை என்று பொது பல சேனா மறுத்துள்ளது .
அண்மையில் நிப்போன் ஹோட்டலில் ஜாதிக பலசேனா அமைப்பின் உறுப்பினரான வட்டரத விஜித தேரர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் மாநாட்டினை தீவிரவாத பொதுபலசேனா அமைப்பினர் குழப்பிய வட்டரக விஜித தேரருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment