கலேவலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான குறித்த யுவதி செய்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.
சுமார் 10 மாதங்கள் வரை நீடித்த இவ்விருவருக்கும் இடையிலான காதல் தொடர்பு முறிவடைந்துள்ள நிலையிலேயே போலி பேஸ் புக் கணக்கொன்று ஊடாக இந்த நிர்வாண புகைப்படங்கள் இணையத்துக்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த புகைப்படங்களை வைத்து யுவதி அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முறிந்து போன காதல் தொடர்பை மீண்டும் தன்னுடன் ஆரம்பிக்குமாறும் அவ்வாறு செய்யாது விடத்து மேலும் பல நிர்வாண புகைப்படங்களை வெளியிடப்போவதாகவும் குறித்த இளைஞர் மிரட்டியுள்ளதாக யுவதியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக காதலிக்கும் சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் யுவதியின் நிர்வாண புகைப் படங்களே இவ்வாறு இணையத்துக்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் குருணாகலை நகருக்கு குறித்த இளைஞரை வரவழைத்த யுவதி பொலிஸாரின் திட்டத்துக்கு அமைவாக பொலிஸ் குழுவுடன் நேற்று அங்கு சென்றுள்ளார். இதன் போது முச்சக்கரவண்டியொன்றில் காத்திருந்த குறித்த இளைஞர் உடனடியாக யுவதியை அவ்வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட போது உடன் சென்ற பொலிஸ் குழு இளைஞரை கைது செய்தது.
இதனை அடுத்து தம்புள்ளை நீதிவான் நீதிமன்றில் குறித்த இளைஞர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் அங்கு வைத்து அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து எதிர்வரும் 22 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியளில் வைக்க நீதிவான் உத்தரவிட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

0 comments:
Post a Comment