சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, April 1, 2014

யாருக்கு அந்த ஆசனம்? மு.கா விற்குள் பிரச்சினை

By on 7:15 PM

கொழும்பு மாவட்ட விருப்பு வாக்கு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள ஆட்சேபனை குறித்து இன்று இறுதி தீர்மானம் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள்

ஆணையாளர்கள் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விருப்பு வாக்கு எண்ணிக்கைகள் வெளியிடப்பட்ட போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் ஒருவரின் விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அந்த கட்சி தமது ஆட்சேபனை மனுவை வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள மேன்முறையீட்டு மனு தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், அரசியல்வாதியோ அல்லது அதிகாரியொருவரோ தேர்தல் பெறுபேறுகளை வஞ்சனையான முறையில் மாற்றியமைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment