சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, April 2, 2014

விருப்பு வாக்கு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு!

By on 7:57 PM

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விருப்பு வாக்கு பிரச்சினை தீர்க்கப்பட்டு விருப்பு வாக்கு அடிப்படையில் தெரிவான இரு உறுப்பினர்களின் பெயர்களும் வர்த்தமானியில் பிரசுரிக்க அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதன்படி, கொழும்பு மாவட்டஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக அர்சாத் நிசாம்தீன் தெரிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக பாயிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உறுப்பினரை வென்றதோடு அப்துல் ஹையே தெரிவானதாக முதலில் அறிவிக்கப்பட்டது.  ஆனால், விருப்பு வாக்கு எண்ணுவதில் தவறு இடம் பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு விருப்பு வாக்குகள் மீள கணக்கிடப்பட்டது.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விருப்பு வாக்கு தொடர்பில் ஏற்பட்ட குழப்பமும் வேட்பாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்பட்டதாக ஆணையாளர் கூறினார். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

தெரிவுசெய்யப்பட்டோர்
அர்சாத் நிசாம்தீன்       5,694

தெரிவு செய்யப்படாதோர்
எச்.ஏ. ஹைப் மொஹிதீன்     4,481
எம். நைசல்                3,331

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

தெரிசெய்யப்பட்டோர்
ஏ.ஜ.மு.பாயிஸ்            4,208

தெரிவு செய்யப்படாதோர்
எம். சுபைர்          2,212
டக்ளஸ் செனவிரத்ன   2,138

0 comments:

Post a Comment