சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, April 1, 2014

ஹிஜாப் அணியும் உரிமை மறுப்பு வழக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

By on 7:37 PM

முஸ்லிம்களின் உடையான ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு நாவல ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து குறித்த பாடசாலையின் முஸ்லிம் மாணவி வழக்கு தாக்கல் செய்தமையை கண்டித்தும் , அதிபருக்கு ஆதரவு தெரிவித்தும் குறித்த பாடசாலை மாணவர்களின் பெற்றோர் என தம்மை அழைத்து கொண்டவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்தினம் (31) நடாத்தப்பட்டுள்ளது .



குறித்த வழக்கில் பிரதிவாதிகள் 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதியரசர்கள் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளனர்.

ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு நாவல ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அந்த வித்தியாலயத்தில் பயிலும் 11 வயது மாணவியான பாத்திமா ஹகீனா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.



இந்த மனு நீதியரசர்களான சந்திரா ஏக்கநாயக்க, பிரியசத் டெப் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிரதிவாதிகளாக வித்தியாலயத்தின் அதிபர் தக்சில நயன பெரேரா துணை அதிபர் ஹேமமாலி 7 ஆம் வகுப்பாசிரியை திருமதி  நடோதுன்ன ஆகியோருடன் மாகாண கல்வி பணிப்பாளர், கல்வியமைச்சர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அந்த மாணவி தனது மனுவில் பாடசாலை அதிபரால் தான் தீவிரமான மனக்கஷ்டங்களுக்கு  உட்படுத்தப்பட்டதாகவும் தனது சமய ஆசார முறைப்படி அணியும் ஆடையை அணியக்கூடாது என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் இந்த அதிபர் முஸ்லிம் மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கு எதிரான மனேநிலையில் உள்ளவர் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார் என அறிய முடிகிறது.



அதேவேளை முப்பது வரையான முஸ்லிம் மாணவியர் கற்கும் பாடசாலையில் முஸ்லிம் கலாசார உடை அணியும் உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ள குறித்த மாணவியும் அவரின் பெற்றோரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர் .

0 comments:

Post a Comment