சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, April 29, 2014

மாவனல்லை கெரமினிய மஸ்ஜித் குறித்து பொலிசில் முறைப்பாடு

By on 8:45 PM

மாவனல்லை கெரமினியவில் இயங்கி வரும் ஐவேளை தொழுகை நாடத்தப்பட்டு வரும் பள்ளி வாசல் சட்டவிரோதமானது எனகூறி பொதுபல சேனா அமைப்பு மாவனல்லை பொலிஸ் நிலையத்தில்

முறைப்பாடு செய்துள்ளது. இம் முறைப்பாட்டை அல்பிடிய தேரர் செய்துள்ளார்.

மாவனல்லை பொலிசார் கடந்த வியாழனன்று குறுப்பிட்ட பள்ளி வாசலுக்கு விஜயம் செய்து முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். மூன்று வருடங்களாக இயங்கி வரும் இப்பள்ளி வாசல் முறையாக பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் பொலிசாரிடம் தெரிவித்ததோடு பதிவு ஆவணங்களின் பிரதியையும் கையளித்ததாக பள்ளிவாசல் நிர்வாகி இஸ்மத் ஹாசிம் தெரிவித்தார்

0 comments:

Post a Comment