சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, April 29, 2014

SLTJ இடம் ஐந்து மணித்தியால விசாரணை

By on 8:48 PM

கொழும்பு குற்றப்புலனாய்வு  பிரிவிற்கு அமைப்பின் பொது செயலாளர் அழைக்கப்பட்டமையால்  நேற்று ஸ்ரீலங்கா தவ்ஹீத்  ஜமாஅத் தலைவர் மற்றும்  பொதுச் செயலாளர் அப்துர் றாசீக்  ஆகியோர் கொழும்பு குற்றப்புலனாய்வு  பிரிவிற்கு சட்டத்தரணி சகிதம்  அங்கு சென்றுள்ளனர் .

இந்த விசாரணையின்போது  பௌத்த மதத்தினை நிந்திக்கும் வகையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத்  ஜமாஅத்தினால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் சி .டி  தொடர்பிலும் , அந்த அமைப்பின் வருமான மூலங்கள் நிதி வளம்  மற்றும் செயல்பாடுகள் வெளிநாட்டு தொடர்பு ஆகியவை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது

இதேவேளை, ஸ்ரீலங்கா தவ்ஹீத்  ஜமாஅத்தின் தலைமையகத்திற்கு நேற்று மாலை பொலிஸ் தலைமையகத்தினால் ஒரு குழுவினர் விஜயம் செய்து வாக்குமூலம் பெற்று சென்றுள்ளனர் .

0 comments:

Post a Comment