ஐ.சி.சி இருபதுக்கு இருபது அணிகளுக்கிடையிலான தரவரிசை பட்டியலின் படி இந்தியா அணி முதல் அணியாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
வருடாந்த புள்ளி விபரங்களின் படியே இத்தரப்படுத்தல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண இருபதுக்கு இருபதுத் தொடரை கைப்பற்றியதுடன் இலங்கை அணி தரப்படுத்தலில் முன்னிலைக்கு வந்தது. எனினும் அந்த தொடருக்கு பிறகு எந்தவொரு இருபதுக்கு இருபது போட்டியும் இடம் பெறவில்லை. இதன் பிறகே வருடாந்த புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தலில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
வருடாந்தம் ஆகஸ்ட் மாதமே தரப்படுத்தலில் இவ்வாறான மாற்றங்கள் இடம்பெறுவது வழக்கம். எனினும் இவ்வருடம் முதல் மே மாதம் 01ம் திகதி தொடக்கம் இவ்வாறான மாற்றங்கள் செய்யப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment