இந்திய வரலாற்றில் தாய் முன் பதவியேற்கும் முதல் பிரதமர் மோடி
இந்திய வரலாற்றில் முதல் முறையாக தன் தாயின் முன்பாக நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் முதல் நபர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.
வெற்றி செய்தி வந்தபிறகு 95 வயதான தன் தாய் ஹீராபென்னை சந்தித்து நரேந்திர மோடி ஆசி பெற்றார்.
குஜராத்தின் தலைநகர் அகமதா பாத்திற்கு அருகிலுள்ள காந்தி நகரில் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசிக்கிறார் ஹீராபென். ஆசி பெற்ற மகனுக்கு பிடித்த லட்டை அன்புடன் ஊட்டிவிட்டார். வீட்டு வராண்டாவில் அமர்ந்தபடி தன் தாயுடன் சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார் மோடி.

இது குறித்து ஹீராபென் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'என் மகன் மோடிக்கு எனது ஆசிர்வாதங்கள் எப்பவும் உண்டு. இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக நான் பிரார்த்தனை செய்வேன்' என்றார்.
இந்த சந்திப்பின்போது மோடியை காண்பதற்காக அப்பகுதியில் வாழும் ஏராளமான பொதுமக்கள் ஹீராபென் வீட்டு முன்பாக கூடினர்.
மக்களவை தேர்தல் முடிவுகள் தமக்கு மாபெரும் வெற்றியை தந்து கொண்டிருக்க, இணையதளத்தில் தன் ட்வீட் பக்கத்தில் மோடி தம் தாயை சந்தித்து ஆசிர்வாதம் பெற விரும்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
மோடியின் மற்றொரு சகோதரரான பிரஹலாத் மோடி சில தினங்களுக்கு முன்பு கூறுகையில், 'ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் இந்த நாட்டின் பிரதமராவார்' என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்: மோடி பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள இமாலய வெற்றியால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மிகவும் குதூகலத்துடன் உள்ளனர்.
நேற்று மதியம் பா.ஜ.க. தலைமை அலுவலத்துக்கு வந்த தலைவர்கள் இனிப்புகளை வழங்கி வெற்றியைக் கொண்டாடினார்கள்.
பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைக்கப் போகும் தகவல் வெளியானதும் மோடியை தொடர்பு கொண்டு பா.ஜ.க. தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்து மழையில் நனைந்த மோடி காந்திநகரில் உள்ள தன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் தாயார் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பிறகு அவர் தன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு வந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கிடையே பா.ஜ.க. வெற்றி பெற்றது பற்றி மோடி டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டார்.
அதில் அவர், ''பா.ஜ.க. பெற்ற வெற்றி இந்தியாவுக்கான வெற்றி. இனி எல்லாம் நல்லதே நடக்கும். நல்ல காலம் வரப்போகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியை ஏற்கிறோம்: காங்கிரஸ் கருத்து
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு வரலாறு காணாத சரிவும், தோல்வியும் ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் காங்கிரஸ் 67 தொகுதியில் முன்னணி வகிக்கிறது. 100 தொகுதியை கூட கைப்பற்ற முடியாமல் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் சத்யவ்ரத் சதுர்வேதி கூறுகையில்,
''தேர்தல் முடிவு எங்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றாலும் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம். நல்ல அரசியல் கட்சியாக தொடர்ந்து பணியாற்றுவோம்'' என்றார்.
இதே போல் மத்திய மந்திரி ராஜீவ் சுக்லாவும் தேர்தல் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தோல்வியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகத்தில் எதுவும் நடக்கலாம். இது மக்கள் அளித்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ராஜீவ் சுக்லா கூறினார்.
காங்கிரஸ் செய்த சாதனைகளையும், நலத்திட்டங்களையும் மக்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நரேந்திரமோடி பற்றிய மக்களின் கனவுதான் பா.ஜனதாவுக்கு இந்த வெற்றியை கொடுத்து இருக்கிறது. அவரை சூரியன், சந்திரன், வியாழன் என்று நம்பி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

60 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் சாதனை
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து வதோதராவில் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து மோடி பேசியதாவது:-
வதோதரா சகோதரர்கள் முன்புதான் முதலில் உரையாற்ற திட்டமிட்டிருந்தேன். இந்த வெற்றியை அளித்ததற்காக உங்களுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்க வந்துள்ளேன்.
வதோதரா தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு என்னால் 50 நிமிடங்கள்தான் ஒதுக்க முடிந்தது. ஆனால், 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எனக்கு வெற்றியை நீங்கள் அளித்துள்ளீர்கள். இது வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது. 60 ஆண்டு கால சுதந்திர வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த சகோதர-சகோதரிகளுக்கு நன்றி.
ஜனநாயக நடைமுறைகளை புரிந்துகொண்டதால் மக்கள் இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். ஜனநாயகத்தின் வலிமையை வதோதரா மக்கள் உலகிற்கு பறைசாற்றியுள்ளனர். தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். நான் ஏற்கனவே கூறியபடி குஜராத் மக்கள் 26 எம்.பி.க்களை அளித்துள்ளனர்.
வாரணாசியில் என்னுடைய கருத்தை தெரிவிக்க முடியாவிட்டாலும் எனக்கு நீங்கள் அளித்துள்ள பொறுப்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.

நரேந்திரமோடி 21–ந் திகதி பதவி ஏற்பு
பாரதீய ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி இன்று வதேதரா தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நாளை அவர் வாரணாசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். பிறகு காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார்.
இதையடுத்து அவர் குஜராத் மாநில முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லி புறப்பட்டு செல்வார். 21–ந்தேதி (புதன்கிழமை) மோடி பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் பதவி ஏற்பு வைபவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு அதிகாரிகள் செய்ய தொடங்கி விட்டனர்.

பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நடிகர்–நடிகைகள் 6 பேர் வெற்றி
பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட இந்தி நடிகர்கள் வினோத் கன்னா, சத்ருகன்சின்கா, ஆகியோர் குருதாஸ்பூர் (பஞ்சாப்), பாட்னா சாகிப் (பீகார்) ஆகிய தொகுதிகளில் முறையே வெற்றி பெற்றனர்.
டெல்லி வட கிழக்கு தொகுதியில் போஜ்பூரி நடிகர் மனோஜ் திவாரியும், கிழக்கு அகமதாபாத் தொகுதியில் (குஜராத்), இந்தி குணச்சித்திர நடிகர் பரேஷ்ராவலும் வெற்றியை ருசித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் முதல் பெண் வேட்பாளராக நடிகை ஹேமமாலினி தேர்வு பெற்றார். சண்டிகாரில் கடும் உள்கட்சி பூசலுக்கு மத்தியில் இந்தி நடிகை கிரண்கேர் முன்னாள் ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலை தோற்கடித்தார். இவர்கள் 6 பேரும் பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்ற நட்சத்திரங்கள் ஆவார்கள்.
நடிகை மூன் மூன் சென் (திரிணாமுல் காங்கிரஸ்) பன்குரா தொகுதியில் (மேற்கு வங்காளம்) வெற்றி பெற்றார்.
பா. ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நட்சத்திரங்களில் டி.வி. நடிகை ஸ்மிருதிராணி 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ராகுல் காந்தியை எதிர்த்து அவர் அமேதி தொகுதியில் போட்டியிட்டார்.
பாலிவுட் இசை அமைப்பாளர் பப்பிலஹரி ஸ்ரீராம்பூர் தொகுதியில் (மேற்கு வங்காளம்) பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இவரும் 3–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதே போல் பா.ஜனதா சார்பில் களத்தில் நின்ற மேஜிக் நிபுணர் பி.சி. சர்காரும் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நட்சத்திரங்கள் ராஜ்பாப்பர், நக்மா தோல்வி அடைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் காஜியா பாத்தில் போட்டியிட்ட நடிகர் ராஜ்பாப்பா பா. ஜனதாவை சேர்ந்த முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங்கிடம் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். நடிகை நக்மா உ.பி. மாநிலம் மீரட் தொகுதியில் தோற்றார். இதே போல காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட போஜ்புரி நடிகர் ரவிகிஷன், குணால்சிங் ஆகியோரும் தோற்றனர்.
இதேபோல் நடிகை ஜெயப்பிரதா (ராஷ்ட்டீரிய லோக் தளம்), குல்பனாக் (ஆம் சூத்மி) பாலிவுட் இயக்குனர் பிரகாஷ்ஜா (ஐக்கிய ஜனதா தளம்) நடிகர் ஜாவித் ஜபேரி (ஆம் ஆத்மி), கவர்ச்சி நடிகை ராக்கி சவாந்த் ஆகியோர் தோல்வியை தழுவினார்கள்.

வெற்றி மகிழ்ச்சியில் நடிகை ரோஜா கண்கலங்கினார்
சீமாந்திராவில் உள்ள நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நடிகை ரோஜா வெற்றி பெற்றார்.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் முத்து கிருஷ்ண நாயுடுவை விட 858 ஓட்டுகள் அதிகம் பெற்றார்.
வித்தியாசம் குறைவாக இருந்தாலும் வெற்றி பெற்றதே பெரிய சாதனை என ரோஜா கருதினார்.
வெற்றி சான்றிதழை பெற்றதும் அவர் உணர்ச்சி பெருக்கில் 'ஓ' என்று கதறி அழுதார்.
கூடிநின்ற நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் நிதானம் அடைந்த நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது:–
30 ஆண்டு கால அரசியல் சாணக்கியர்களாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் இந்திரா பிரியதர்சினியின் தந்தை சென்னா ரெட்டி, தெலுங்கு தேச வேட்பாளர் முத்து கிருஷ்ண நாயுடு ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டேன் என்பதை விட யுத்தம் செய்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன்.
2 முறை நான் தெலுங்கு தேசம் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட போது சொந்த கட்சிக்காரர்களால் நான் தோற்கடிக்கப்பட்டேன். இன்று அதே தெலுங்கு தேசத்துடன் காங்கிரஸ் கட்சியினரும் சேர்த்து என்னை தோற்கடிக்க சதி செய்தார்கள். அதையும் மீறி நான் வெற்றி பெற்றது சாதனையாக கருதுகிறேன்.
நான் நல்ல நடிகையாக இருந்துள்ளேன். சிறந்த குடும்ப தலைவியாக, கணவருக்கு நல்ல மனைவியாக குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து உள்ளேன். ஆனால் அரசியலில் மட்டும் எனக்கு தோல்வியே கிடைத்து வந்தது. இன்று அதிலும் சாதனை படைத்து விட்டேன்.
நகரி மக்களுக்காக என வாழ் நாளை அர்ப்பணிக்க உள்ளேன். அவர்களின் கோரிக்கை நிறைவேற போராடுவேன்.
இவ்வாறு நடிகை ரோஜா கூறினார்.

பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்தார்
பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிரதான எதிர் கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் விடைபெற்றார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து அளித்து நினைவு பரிசும் வழங்கினார்.
இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாட்டு மக்களுக்கும் ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி கூறினார். அப்போது அவர் பேசியதாவது:–
என்னுடைய வாழ்க்கையும், பிரதமர் பதவியில் இருந்த எனது 10 ஆண்டு கால ஆட்சியும் திறந்த புத்தகமாகும். எல்லா வகையிலும் நான் ஒளிவு மறைவு இல்லாமல் இருந்து வருகிறேன். இந்த நாட்டுக்காக நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து முடித்துள்ளேன்.
காங்கிரஸ் தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு வளர்ச்சிக்காக நாங்கள் நிறைய செய்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா நிறைய வெற்றிகளையும் சாதனைகளையும் கண்டது. இதற்காக நாம் பெருமை கொள்ள வேண்டும்.
தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டும். புதிதாக அடுத்து பொறுப்பு ஏற்க இருக்கும் அரசுக்கு நான் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதனுடைய இலக்குகளை எட்ட வாழ்த்துகிறேன்.
இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் வலிமையான நாடாக மாறியுள்ளது. இந்தியாவை மேம்படுத்துவதற்கான வளமும், ஆற்றலும் இன்னும் நம்மிடம் நிறைய உள்ளது. புதிய அரசு அதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று நான் பிரதமராக இருந்து நாட்டு மக்களுக்கு எனது கடைசி உரையை ஆற்றுகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் என்னிடம் பிரதமர் பொறுப்பை ஒப்படைத்த போதுஇ நான் சுறுசுறுப்பையும் விடா முயற்சியையும் ஆயுதமாக கொண்டு செயல்பட தொடங்கினேன்.
வாய்மையே எனது கலங்கரை விளக்காக உள்ளது. நாட்டு மக்களுக்கு எப்போதும் நல்லதையே செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதன்படியே 10 ஆண்டுகளாக செயல்பட்டுள்ளேன்.
இன்று நான் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன். கடவுள் அளிக்க போகும் இறுதி தீர்ப்பு எனக்கு முன்னதாக நன்றாகவே தெரிந்திருந்தது. நாம் பெற்ற தீர்ப்பை கவுரவப்படுத்த வேண்டும்.
நடந்து முடிந்துள்ள பாராளுமன்ற தேர்தல் நமது ஜனநாயக அரசியலின் அடித்தளத்தை மேலும் ஆழப்படுத்தி வலிமையாக்கி உள்ளது.
இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.
இன்று 11.30 மணிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய மந்திரி சபையின் கடைசி கூட்டம் நடந்தது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார்.
அப்போது அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தனக்கு ஒத்துழைப்பு அளித்த மந்திரிகளுக்கு மன்மோகன் சிங் நன்றி கூறி அனைவரிடமும் இருந்து விடைபெற்றார்.
இன்று மதியம் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். மன்மோகன் சிங் அங்கிருந்து விடை பெற்றார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விடை பெறும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மந்திரி சபையில் இடம் பெற்றவர்களுக்கு விருந்தளிக்கிறார்.

0 comments:
Post a Comment