சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, May 19, 2014

அரசின் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை மீது இன்றும் நாளையும் சபையில் விவாதம்

By on 8:04 PM

தெற்காசிய போதைப்பொருள் வர்த்தகத்தில் இலங்கை கேந்திர மத்திய நிலையமாக இயங்கிவருவதாக வெளிவந்துள்ள புலனாய்வுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஐ.தே.க இனால் அரசாங்கம் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை இன்றும் நாளையும் சபையில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாளை மாலை இதற்கான வாக்கெடுப்பு சபையில் இடம்பெற உள்ளது.

கடந்த காலங்களில் அரசின் இந்நடவடிக்கை தொடர்பில் அரசாங்க பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய அதிருப்தி கொண்டிருந்தது. எனினும் வாக்கெடுப்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் இன்னும் அக்கட்சி முடிவொன்றை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறத.

அதே போன்ற மற்றுமொரு பங்காளி கட்சியான தேசிய சுதந்திர முன்னணியும் அரசின் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பில் தமது முடிவை நாளை காலை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே போன்று ஜே.வி.பி, த.தே.கூ ஆகியவையும் தமது நிலைபாட்டை நாளை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment