சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Monday, May 19, 2014

மோடியின் வெற்றி தெற் காசிய வலய இருண்ட யுகம் ஒன்றிற்கு வழி வகுக்கும்: வாசு

By on 7:48 PM

இந்தியப் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்பது தெற்காசியாவை இருண்ட யுகத்திற்கு தள்ளி விடும். பயங்கரவாதமான நிலைமைகளை தோற்றுவிக்கும் என அரசின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்காலத்தில் இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளிலும் விரிசல்களை ஏற்படுத்த வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தியத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்று பாரதீய ஜனதா  கட்சி ஆட்சிப்பீடமேறப்போவதோடு பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கிறார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மோடியின் வெற்றி தெற்காசிய வலயத்திற்கு இருண்ட யுகமொன்றிற்கு வழிவகுக்கும். இந்தியாவிற்குள் சிவில் வன்முறைகள் தலைதூக்கும் இன மத ரீதியான மோதல்களால் அந்நாட்டில் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவார்கள்.  மறுபுறம் அயல் நாடுகளுடன் மோதல்கள் ஏற்படும் அபாயமும் காத்திருக்கின்றது. இதற்கு சீனா தொடர்பாக மோடிக்குள்ள அச்சமே காரணமாகும். ராஜ்தீரிய சுயசேவா சங்கமே மோடியின் பின்னணியில் உள்ளது. இது கடும் இந்துத்துவ மதக்கொள்கையுடைய  இனவாத அமைப்பாகும்.  மகாத்மா காந்தியின் அஹிம்சா வழிப் போராட்டத்தை எதிர்த்த இவ்வமைப்பு தான் காந்தியின் கொலைக்கு காரணமாயிருந்தது.

அத்தோடு பாரதீய ஜனதா கட்சியின் வெற்றியானது எதிர்காலத்தில் நாடுகளின் மகிழ்ச்சிக்கும் இந்தியாவின் செல்வந்தர்களின் தேவைகளை நிறைவேற்றுவதாக அமையும். இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளில் விரிசல்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இதற்கு மோடி அரசாங்கத்தின் சீன எதிர்ப்பு கொள்கையே காரணமாக அமையப் போகின்றது. ஆனாலும் விடுதலைப்புலிகளுக்கு மீண்டும் தலைதூக்க மோடி அரசாங்கம் ஆதரவளிக்கும் என்பது கேள்விக்குறியாகும்.

ஏனெனில் விடுதலைப்புலி ஆதரவாளர்களான வைகோ உட்பட பலர் மோடியின் ஆதரவாளர்களாக இருப்பதால் இது தொடர்பாக இப்போதே கணிப்பிட முடியாது  என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment