நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 200ற்கும் அதிகமான மாணவியர்களை விடுவிக்குமாறு கோரி உலக இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்ட நைஜீரியா உள்ளிட்ட நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவரும் உலக இளைஞர் மாநாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள ஊடக நிலையத்துக்கு முன்பாகவும், மாநாடு நடைபெறும் மண்டபத்திலும் இவர்கள் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
நைஜீரியா உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளின் இளைஞர் பிரதிநிதிகள் சுமார் 50 பேரளவில் இதில் ஈடுபட்டனர். 'எமது மாணவியரை மீட்கவும்' என்ற பதாகைகளைத் தாங்கியவாறு ஊடக மையத்துக்கு முன்னால் கூடிய இளைஞர் பிரதிநிதிகள், இவ்விடயம் ஊடகங்கள் மூலம் சர்வதேச ரீதியில் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
உலக இளைஞர் மாநாட்டில் நைஜீரிய அமைச்சர் கலந்துகொண்டிருந்தபோதும் நைஜீரிய மாணவியர் கடத்தப்பட்ட விடயம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லையென்றும், இவ்விடயம் ஊடகங்கள் மூலம் சர்வதேச ரீதியில் கவனிக்கப்பட வேண்டுமென்றும் இதில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 200ற்கும் அதிகமான மாணவியர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களை உயிருடன் மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
பிள்ளைகளைப் படிக்கவைத்து சிறந்தவர்களாக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவைக்கின்றோம். எனினும், பாடசாலைக்குக் கூட நிம்மதியாகச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக இதில் கலந்துகொண்ட ஆபிரிக்க பெண் ஒருவர் கூறினார்.

0 comments:
Post a Comment