முஸ்லிம்கள் செறிந்து வாழும் அளுத்கம, தர்கா நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சிங்கள வர்த்தகர் ஒருவர் இதன் பின்னணியில் இருப்பதாகவும், தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் நசீம் கானின் சகோதரர் சிறுமியொருவரை பாலியல் துஷ;பிரயோகம் செய்ததாக பொய் குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவம் ஒன்றும் கடந்த காலங்களில் திட்டமிடப்பட்டு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள முஸ்லிம் சகோதரர்கள் இது திட்டிமிட்ட சதியென தெரிவித்துள்ளதுடன் இன்றைய தினம் தமக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவிருப்பதை தாம் ஏற்கனவே அறிந்திருந்ததாகவும் இது குறித்து பொலிசாருக்கும் அறிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

தேவையேற்படின் உடனடியாக ஸ்தலத்திற்கு வருவோம் என பொலிஸ் தரப்பு பதிலளித்திருந்ததாகவும் இந்நிலையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் வர்த்தகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள வர்த்தகரின் சகோதரர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதே வேளை நேற்று ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து பிரதேச வாசிகள் இச்சம்வம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர். பொலிஸ் தலையீட்டின் பின்னர் ஆர்ப்பாட்க்காரர்கள் கலைந்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் வர்த்தகத்தில் பொறாமை கொண்ட பேரின சமூகமே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

0 comments:
Post a Comment