சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Sunday, May 11, 2014

பொலிஸ் அதிகாரிகளின் பொடு போக்கே கடை எறிப்புக்கு காரணம் - அமைச்சர் ரிஷhட்

By on 7:50 PM

25 மீட்டருக்கு அருகில் பொலிஸ் நிலையம் உள்ளது, 5 கோடி ரூபாய் சொத்து நாசமாக்கப்பட்டுள்ளது. அளுத்கம முஸ்லிம் வியாபார நிலையத்தை நாசம் செய்யும் வரை பொலிஸ் அதிகாரிகள் என்ன செய்தார்கள்? என இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று அதிகாலை திட்டமிட்ட அடிப்படையில் தீ வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும்  அளுத்கம முஸ்லிம் வியாபர நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவத்த அமைச்சர்:

குறித்த  வியாபர நிலையதிற்கு அருகே கூட்டுரவுக் கடை, புகையிரத நிலையம் போன்றவை உள்ளது. இரவு நேரத்தில் ஒவ்வொரு  மணித்தியாலத்துக்கு ஒரு முறை பொலிஸார் அங்குள்ள பாதுகாப்பு புத்தகங்களில் கையொப்பம் வைப்பார்கள். மேலும் இவ் வியாபர நிலையத்துக்கு அருகில் அரச மக்கள் வங்கி ஒன்று உள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சீ.சி.டி கேமரா அன்று இயங்கவில்லை என தெரிவித்துள்ளனர். எனவே இது திட்டமிட்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு நாசகாரர்களால் செய்யப்பட்ட சதி. இதனை நாசகாரர்கள் செய்யும் வரை பொலிசார் வேடிக்கை பார்த்துக்கொண்டா இருந்தார்கள் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த நாசகார செயல் தொடர்பில் அமைச்சர், ஜனாதிபதியிடம்  எடுத்துக் கூறுவதாக வியாபர நிலைய உரிமையாளருக்கு தெரிவித்தார். இதன்போது அமைச்சர் தர்கா நகர் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முஸ்லிம் பிரமுகர்களையும் சந்தித்துப் பேசினார்.



அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அளுத்கம பொலிசார் மற்றும் அதிகாரிகளிடம் முஸ்லீம்களது வியாபார ஸ்தாபணங்களை நாசம் செய்யும் வரை பாhத்துக்கொண்டா இருந்தீரர்கள் 25 மீட்டருக்கு அருகில் பொலிஸ் நிலையம் உள்ளது. 5 கோடி ருபாவுக்குரிய சொத்துக்கு நாசம் ஏற்பட்டுள்ளதே.
அருகில் அரச மக்கள் வங்கி, புகையிரத நிலையம், உள்ளது. கூட்டுரவுக் கடை உள்ளது. ஒவ்வொரு மணித்தியாலமாகச் சென்று அங்குள்ள பாதுகாப்பு புத்தகங்களில் iயொப்பம் வைப்பீர்கள். சம்பவ தினத்தன்று அருகில் இருந்த மக்கள் வங்கியின் சீ.சி. டி கமரா இயங்கவில்லை எனச் சொல்லுகின்றீர்கள். திட்டமிட்டு முஸ்லீம்களின் பொருளாதாரத்தில் கை வைக்க முற்பட்டுவிட்டிகள் நாசகாரர்கள் இதனைச் செய்யும் மட்டும் பார்த்துக்கொண்டா இருந்தீர்கள். என பொலிசாரிடம் என முறையீடு.

மேலும் இவ்வியடம் சம்பந்தமாக நான் ஜனாதிபதியிடமும் எடுத்துக் கூறுவதாக உரிய வர்த்தகருக்கு ஆறுத்ல் சொன்னார். தர்கா நகர் ஜூம்ஆப் பள்ளிவாசலில் அங்குள்ள முஸ்லீம் பிரமுகர்களையும் சந்தித்து பாதிக்கப்பட்ட கடையும் சென்று அமைச்சர் பார்iவியிட்டார்.

அளுத்கம வர்த்த நிலையத்தின் உரிமையாளர்  அஹமட் கான்  (தர்கா நகர்) தகவல் தருகையில் -

கடந்த 10 வருடகாலமாக அளுத்கம நகரில் பாதையோர வியாபாரியாக செயற்பட்டு சிறுகச் சிறுக வியாபாரித்தில் முன்னேறினேன்.  இரவு பகலாக எனது  உழைப்பால் உயர்ந்தவன்ன் நான் . நான் அளுத்கம நகரில் தமிழ் சகோதரர் ஒருவரிடமிருந்தே பழைய கடையொன்றை  சொந்தமாக வாங்கி அதனை இரண்டுமாடி கட்டமாக  நிர்மாணித்து அஸ்மா ஸ்டோர்ஸ் என பெண்சிகுட் சமாண்கள், கைக்கடிகாரம் போன்ற பொருட்கள் மூலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தேன் .

நகரில் முஸ்லிம்களது கடைகள் 80க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அத்தனை கடைகளும் பெரும்பாண்மைச் சமுகத்திநருக்கு சொந்தமான  கட்டிடங்களில் அல்லது நகர சபைக்குச் சொந்தமான கடைகளில் உள்ள , அங்கு வாடகைக்கு  வியாபாரம் செய்து வருகின்றனர். அளுத்கம நகரில் எமது கடை மட்டுமே சொந்தக் கட்டம் . இதனை பெரும்பாண்மைச் வியாபாரிகளுக்கும் அருகில் உள்ள பண்சலையில் உள்ளவர்களுக்கும்  பொருக்கமுடியாமல் இருந்து வந்தது

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி பெந்தரையைச் சேர்ந்த பெரும்பாண்மைப் பென்னொருவர்  கடைக்கு வந்து  அவர் அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பௌத்;த பண்சலையில் தகம் பாடசாலையில் பணியாற்றுபவர். இவர் இக்கடைக்கு பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக தமது 7 வயது மகனுடன் கடைக்கு வந்தார் பின்னர் வீட்டுக்குச் சென்று 4 மணித்தியாலத்திற்கு பிறகு அப் பெண் தனது மகனுக்கு என்ன செய்தீர்கள்?. அவரது மர்ம உறுப்பு நோவுவதாகவும் சொல்கின்றார் என முறையிட்டார்

அதன் பின் அவர் பொலிசிசுக்குச் சென்று முறையிட்டார்  மகனை  வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிசார் கூறியுள்ளனர்   அதன் பின்னர் கடையில் இருந்த சீ.சீ.டி கமரா பரீட்சிக்கப்பட்டது  எனது  சகோதரர் (50)வயது அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் ஒருநாள் இருந்தார் . அதன்பின்னர் அவர் நீதிமன்றம் ஊடாக 2500 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அடுத்தநாள் பெந்தரையில் இருந்து 300 பேரும் அளுத்கம புகையிரத நிலையத்திற்கு முன் உள்ள பண்சலை பௌத்த குருக்களுடன் கடைக்குமுன்னால் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். அதன் கடை திறந்திருந்தது. அதில் உனது கடைக்கு என்ன செய்கின்றோம் பார் எனச் சொல்லியதும்.  அளுத்கம பொலிஸில் சென்று  எனது கடைக்கு (இரவு) பாதுகாப்பு தாருங்கள் எனக் கேட்டுகொண்டேன் . அதற்க பொலிசார் அங்கு ஒன்றும் நடைபெறவில்லை அப்படி பாதுகாப்பு வழங்க முடியாது எனச் கூறினர் . இக் கடைக்கு முன்னால் மக்கள் வங்கி உள்ளது. அதில் சீ.சி. டி கமரா உள்ளது.நேற்று முன்தினம் அதிகாலை 04.30 மணிக்கு கடை பத்துவதாகவும் சொல்லியதை அடுத்தே அங்கு  சென்று பார்த்துபோது உள்ளே இருந்த பெருமதியான பொருட்களை சுழ்சுசமாக சுரையாடிவிட்டு சீ.சிஇ டி கமாரவையும் சேர்த்து அருகில் உள்ள சிங்கள கடைகளிள் கட்டிடத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி இவர்கள் பற்றவைத்துள்ளனர் என  உரிமையாளர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடம் கூறினார்.

0 comments:

Post a Comment