சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, May 6, 2014

யானை வியாபாரத்தை தடுக்கும் களத்தில் குதிக்கிறது பொதுபல சேனா!

By on 3:25 AM

அமைச்சர்களின் பாதுகாப்பில் யானை வியாபாரம் இடம்பெற்று வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

இந்த மோசடி உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் யானை வியாபாரத்துடன் தொடர்புடைய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படும் என கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேரர் எச்சரிக்கை விடுத்தார். 

புத்த தர்மத்தை முன்னால் வைத்துக் கொண்டு இந்த மோசடி இடம்பெறுவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

அண்மையில் யானைகள் கொலை செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் சுட்டிகாட்டியுள்ளார். 

பொதுபல சேனா இனி தனியாக அல்லாது பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்புக்குச் செல்லும் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். 

காட்டில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டிய அதிகாரிகள் வீட்டில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கையை கணக்கிட முடியாதுள்ளமை கேலியானது என அவர் தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment