தம்புள்ளை பள்ளிவாசலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக தற்போது பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும் பள்ளவாசலை தற்போது ஆண்டியுள்ளதாகவும் (சுமார் 10 அடிவரை அருகில் வந்துள்ளதாக ) மேலும் தெரிய வருகின்றது. அநேகமாக நாளை பள்ளிவாயல் கட்டிடத்தையும் அகற்ற வாய்ப்புள்ளதாகவும், பதட்ட நிலை காணப்படுவதால் இங்கு தற்போது சுமார் 100 போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.
இதுதொடர்பில் மத விவகாரம் தொடர்பான பொலிஸுக்கு தொடர்புகொண்ட போதும் அழைப்புக்கு பதில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சகோதர, சகோதரிகள் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம், அவனது மாளிகையை காப்பாற்ற துஆ செய்வோம்.
எல்லாம் வல்ல இறைவன் எமது புனித இல்லத்தைப் பாதுகாப்பானாக

0 comments:
Post a Comment