சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, May 6, 2014

ஆதாரமற்ற குற்றசாட்டு பாதுகாப்பு அமைச்சு

By on 10:51 PM


இலங்கையில் இந்தியாவுக்கு எதிராக  தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக வெளியான தகவலை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மீண்டும் ஒருமுறை மறுத்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பாக நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், தமிழக அரசியல்வாதி ஒருவர் இலங்கையில் இந்தியாவுக்கு எதிராக  தீவிரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக தெரிவித்தமை அரசியல் தேர்தல் நோக்கம் கருதிய அறிக்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் இல. கணேசனே இந்த கருத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment