சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, October 20, 2015

இலங்கை கிரிக்கெட் விருது விழா: 4 விருதுகளை அள்ளினார் மத்தியூஸ்

By on 7:24 PM

இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வில் இலங்கை அணித்தலைவர் அன்ஜலோ மத்தியூஸ் நான்கு விருதுகளை வென்றார். அதேபோன்று முன் னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக் கார தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் ஆண்டின் பிரபல கிரிக்கெட் வீரராக விருது வென் றார்.

ஆண்டு தோறும் நடைபெறும் இலங்கை கிரிக் கெட்டின் விருது வழங்கும் நிகழ்வு பத்தரமுல்லை வோட்ர்ஸ் ஏர்ஜpல் கடந்த திங்கள் இரவு இடம் பெற்றது.

கடந்த 2014ம் ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வீரர்களின் திறமை அடிப்படையி லேயே விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த வருடத்திற்கான சிறந்த வீரருக்கான விருது, சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர், சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் போட்டி யின் சகலதுறை வீரர் என மொத்தம் 4 விருதுகளை மத்தியூஸ் வென்றார்.

இவர் சிறந்த வீரருக்கான விருதை பெறுவது இது 2ஆவது முறையாகும். அதாவது கடந்த ஆண் டும் சிறந்த வீரருக்கான விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலத்தில் மத்தியயூஸ் டெஸ்ட் போட்டியில் 1160 ஓட்டங்களும், 18 ஒருநாள் போட்டியில் 1244 ஓட்டங்களும், 36 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.

அதேபோன்று சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் விருது ஹேரத்திற்கும், சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் விருது அஜந்த மென்டிஸுக்கும் வழங்கப் பட்டது.

இருபது-20 போட்டிகளின் சிறந்த இருபது-20 துடுப் பாட்ட வீரர் விருது குசல் பெரேராவிற்கும், சிறந்த பந்து வீச்சாளர் விருது நுவன் குலசேகரவிற்கும் கிடைத்தது.

மேலும், இந்த ஆண்டின் மக்கள் தெரிவு விருது குமார் சங்கக்காரவிற்கும், வளர்ந்து வரும் வீரருக் கான விருது கு'hல் பெரேராவிற்கும் வழங்கப்பட் டுள்ளது.

0 comments:

Post a Comment