சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Tuesday, October 20, 2015

ஹஜ்நெரிசலின் உயிரிழப்பு சவூதி அறிவிப்பை விட மும் மடங்கு அதிகம்

By on 7:18 PM

ஹஜ்கடமையின் போது கடந்த மாதம் மக்காவில் இடம்பெற்ற நெரிசல் சம்ப வத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பைவிடவும் சுமார் மூன்று மடங்கு அதிகம் என ஏ.பீ. செய் திச் சேவையின் தரவுகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த அனர்த்தத்தில் 769 பேர் உயிரிழந்ததாக சவூதி அதிகாரிகள் குறிப்பிட்டபோதும், குறைந்தது 2,110 பேர் பலியாகி இருப்பதாக ஏ.பீ. குறிப்பிட்டுள்ளது. செய்தி அறிவிப்புகள் மற்றும் அனர்த்தத்தில் பிரiஜகளை இழந்த 30 நாடுகளின் அறிவிப்புகளைக்கொண்டே இந்த புதிய பலி எண்ணிக்கை அறி விக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டு களில் ஹஜ் கடமையில் ஏற்பட்ட அதிக உயிர்ப்பலி கொண்ட அனர்த்தமாக இது பதிவானது. ஆரம்ப கட்ட உயிர்ப்ப லியை அடுத்து சவூதி நிர்வாகம் உயி ரிழந்தோரின் எண்ணிக்கையை புதுப் பிக்காமல் பேணி வருகிறது.

கடந்த செப்டெம்பர் 25 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 934 பேர் காயமடைந்ததாக சவூதி நிர்வா கம் குறிப்பிட்டிருந்தது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான ஈரானில் மாத்திரம் 465 பேர் பலியாகி இருந்தனர். தவிர, ஆபிரிக்க பிராந்தியத்தில் நைஜிரியாவின் 199 பேரும், மாலியில் 198 பேரும் எகிப்தின் 192 பேரும் கொல்லப்பட்டதாக அந்தந்த நாடுகள் அறிவித்திருந்தன.

0 comments:

Post a Comment