சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Friday, November 27, 2015

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 375000 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்

By on 1:35 AM

கா.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் 375000 மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் சரத்குமார குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டைக்காக கிடைக்கபெற்ற விண்ணப்பங்களில், சுமார் 1800 விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

விண்ணபத்தாரிகள் மீண்டும் சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து ஆட்பதிவுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

சில விண்ணப்பங்களில் பிறந்த தினம், விண்ணப்பதாரியின் கையெழுத்து என்பன குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும், இன்னும் சில விண்ணப்பங்களில் விண்ணப்பதாரியின் நிழற்படங்கள் உரியமுறையில் ஒட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு உரிய முறையில் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களை பூர்த்தி செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் பிறந்தவர்களின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் சமர்ப்பிக்ப்படவில்லை எனவும், இலங்கை பெற்றோரின் பிள்ளைகளாக இருந்தால் இலங்கை சட்டத்தின் படி அவர்கள் உறுதிப்படுத்தல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்துடன் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சமூகமளிக்கும் பட்சத்தில் ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டினார்.

0 comments:

Post a Comment