தூரப்பிரதேசங்களுக்கு செல்லும் ரயில்களில் மிதிப்பலகைகளில் நின்று கொண்டு பயணம் செய்வதற்கு நாளை (01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு கருதியே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ள இத் தடைச்சட்டம் எதிர்வரும் காலங்களில் அனைத்து ரயில் பயணங்களுக்கும் அமுல்படுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

0 comments:
Post a Comment