மத்திய ஆப்பிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் கிறிஸ்தவர்- முஸ்லிம் பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியரை தலைநகர் பங்குயியில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இடம்பெயர்ந்து சுமார் மூன்று வருடங்கள் நெருங்கியுள்ள நிலையிலேயே இடம்பெயரந்த இஸ்லாமியர்களை பாப்பரசர் சந்தித்துள்ளார்.
இஸ்லாமிய - கிறிஸ்தவ சமயத்தினருக்கும் இடையிலான மோதலில் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரிலிருந்து பல முஸ்லிம்கள் வௌியேறியுள்ளனர். இதில் சுமார் 15,000 முஸ்லிம்கள் ஆயுதமேந்திய கிறிஸ்த போராளிகள் சுற்றிவளைத்திருந்த பிகே 5 என்ற இடத்திலிருந்த வௌியேறியுள்ளனர்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட பரிசுத்த பாப்பரசர் அவருடைய ஆப்பிரிக்க விஜயத்தின் இறுதி திருப்பலியை தலைநகர் பங்குயில் நேற்று (29) நடத்தினார். இதன் போது ஆயுதங்களை கலையுமாறு கிறிஸ்தவ போராளிகளிடம் வேண்டுகோள் விடுத்த பாப்பரசர், ஆயுதங்களுக்கு பதிலாக நீதி, அன்பு, கருணை ஆகிய ஆயுதங்களை தாங்கிக்கொள்ளுமாறு போராளிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் இரு சமயத்தினருக்கும் மோதல் இடம்பெற்றுவரும் கார் எனும் இடத்தில் விரையில் சமாதானம் மலரும் என்று வாழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment