ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில் 7 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஜப்பான் வானிலையியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு கடற்கரையில் உள்ள ககோஷிமா எல்லை மற்றும் சட்சுனான் தீவுகளில் 3 அடி உயரத்திற்கு கடலலை சீற்றத்துடன் காணப்படுவதாகவும், 10 கி.மீ ஆழத்தில் மையமிட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7 ரிக்டர் அளவிற்கு பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கடற்கரையோரப்பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக வேறு இடத்திற்கு செல்லுமாறு ஜப்பான் வானிலையியல் நிறுவனம் அறிவுருத்தியுள்ளது.

0 comments:
Post a Comment