இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவூகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 08 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
டக்வத் லுயிஸ் முறையில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மே.இந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 37.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு 215 என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய இலங்கை அணி குசல் ஜனித் பெரேரா மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோரின் பொறுப்பான இணைப்பாட்டத்தின் விளைவாக 36.3 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பில் திறமையாக ஆடிய குசல் ஒரு ஓட்டத்தால் தனது சதத்தை தவற விட்டமை குறிப்பிடத்தக்கது. லஹிரு திரிமான்ன 81 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இந்த வெற்றியுடன் தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

0 comments:
Post a Comment