பல்வேறு அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில், சுமார் 30 இலட்சம் பேருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கான நிரந்தர காணி உரிமையை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசின் எதிர்கால பொருளாதார வேலைத்திட்டங்கள் குறித்து இன்றைய தினம் (05) பாராளுமன்றத்தில் விசேட உரையினை நிகழ்த்திய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்திற்கு சொந்தமான குடியிருப்புகளில், 10 வருடத்திற்கு மேல் வசிக்கின்ற குடும்பத்திற்கு, குறித்த வீட்டிற்கான வீட்டுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன இணைக்கப்பட்டு, தேசிய ஓய்வூதிய நலன்புரி நிதியம் எனும் பெயரில் புதிய நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மீதான வரிகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு, குறைவான வரி அறவிடும் நாடாக இலங்கையை மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்கால நோக்கம் என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

0 comments:
Post a Comment