சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, November 5, 2015

ஈ.ஏ.பி குழுமத்தின் தலைவர் சோமா எதிரிசிங்ஹ காலமானார்

By on 3:39 AM

பிரபல வர்த்தகரும் ஈ.ஏ.பி குழுமத்தின் தலைவருமான சோமா எதிரிசிங்க இன்று காலமானார்.

76 வயதான சோமா எதிரிசிங்க கொழும்பு தனியார் வை்த்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் .

1939 ஆம் ஆ்ணடு ஜூலை மாதம் 5 ஆம் திகதி மீகொடையில் பிறந்த சோமா எதிரிசிங்க, ஈ.ஏ.பி ஊடக வலையமைப்பு மற்றும் பல வர்த்தக நிறுவனங்களின் தலைவராக செயற்பட்டார்.

நான்கு பிள்ளைகளின் தாயான சோமா எதிரிசிங்க 19 திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் .

வறிய மக்களுக்காக ஜனசரன திட்டம் , சுவநெத கண்வைத்தியசாலை , சங்ஹிந்த வயோதிபர் இல்லங்களை சோமா எதிரிசிங்க ஸ்தாபித்தார்.

2004 ஆம் ஆ்ணடு தேசபந்து , 2005 ஆம் ஆண்டு தேச சக்தி மற்றும் கலாநிதி கௌரவ விருது ஆகியவற்றையும் சோமா எதிரிசிங்க பெற்றுக்காண்டார்.

இறுதி அஞ்சலியின் பொருட்டு இன்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொரல்ல சுலைமான் டெரஸில் உள்ள 17 ஆம் இலக்க வீட்டில் அன்னாரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது .

அன்னாரின் இறுதி கிரிகளைகள் இன்று மாலை 6 மணிக்கு பொரளை மயானத்தில் இடம் பெறவுள்ளது.

0 comments:

Post a Comment