சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, November 5, 2015

ஷார்ஜா டெஸ்டில் பாகிஸ்தான் அபார வெற்றி

By on 3:52 AM

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 306 ரன்கள் சேர்த்தது.

முதல் இன்னிங்சில் 72 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் 27 ரன்கள் எடுத்த ஹபீஸ் 2-வது இன்னிங்சில் அபாரமாக விளையாடி 151 ரன்கள் குவித்தார். இவரது உதவியால் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சி்ல் 355 ரன்கள் குவித்தது. இதனால் பாகிஸ்தான் இங்கிலாந்தை விட 283 ரன்கள் முன்னிலை பெற்றுஇ 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய நான்காவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருந்தது. குக் 17 ரன்களுடனும், ரூட் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரூட் நேற்றைய ரன்களுடன் வெளியேறினார். அவரை யாசீர் ஷா வீழ்த்தினார். அடுத்து வந்த டெயலர் 2 ரன்னிலும், பேர்ஸ்டோவ், படேல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். இதனால் இங்கிலாந்து அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரஷித் 22 ரன்களும், அடுத்து வந்த பிராட் 20 ரன்களும் எடுக்க, இருவரையும் துணையாக வைத்து குக் 63 ரன்கள் சேர்த்தார். கடைசியாக வந்த ஸ்டோக்ஸ் 12 ரன்னில் அவுட்டாக, இங்கிலாந்து அணி 60.3 ஓவரில் 156 ரன்கள் எடுத்து சுருண்டது.

இதனால் பாகிஸ்தான் 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் மூன்று பேட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. சுழற்பந்து வீச்சாளர்கள் யாசீர் ஷா 4 விக்கெட்டும், சோயிப் மாலிக் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

0 comments:

Post a Comment