சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Wednesday, November 25, 2015

கொழும்பு நகரில் கடுமையாக்கப்படும் போக்குவரத்துச் சட்டங்கள்

By on 6:40 PM

கொழும்பு நகரிலும், அண்டிய பகுதிகளிலும் இன்று முதல் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் ஸ்ரீஜயவர்தனபுர வீதியின் ஜயந்திபுரவில் இருந்து கொழும்பு வரையான பகுதியில் அதிக எண்ணிக்கையான பொலிஸாரை ஈடுபடுத்தி வீதிச் சட்டங்கள் முழுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கொழும்பிற்குள் பிரவேசிக்கும் ஏனைய வீதிகளிலும் வீதிச் சட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இதன்போது உரிய வீதிப் போக்குவரத்து ஒழுங்குகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்துகின்றவர்கள் மற்றும் வீதிகளை கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன நெரிசலை குறைப்பதற்கும், விபத்துகளை தவிர்ப்பதற்கும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:

Post a Comment