சமகால நிகழ்வுகளின் நிதா்சனம்

Thursday, November 26, 2015

கைதிகளை விடுவிக்கவும்; யாழ். மாணவன் தற்கொலை

By on 6:37 PM

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு ரயிலில் பாய்ந்து மாணவன் ஒருவர் நேற்று (26) காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கொக்குவில் இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயது மாணவன் ராஜேஸ்வரன் செந்தூரன் எனும் மாணவனே யாழ்ப்பாணம் கோண்டாவில் ரயில் நிலையத்திற்கு அருகில், இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் 'அதிமேதகு ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கம், அனைத்து அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் 'மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது. இந்த அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்குப் புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கின்றது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



0 comments:

Post a Comment